பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் படுகாயம்
11-people-have-been-shot-in-New-Orleans-leaving-2-in

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரென்ச் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடம் வணிக வளாகங்களுக்கு அருகில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மற்றும் பிற தகவல்கள் குறித்தும் லூசியானா போலீசார் விசாரித்து வருகின்றனர்.