பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது: மின்சாரம் தாக்கி 3 மாடுகள் சாவு
The-wired-was-dumped-in-the-stagnant-water-electricity-hit

பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது: மின்சாரம் தாக்கி 3 மாடுகள் சாவு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தநாடார் குடியிருப்பு கோல்டன் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 63), விவசாயி. இவருக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் மற்றும் ஆடு, மாடுகள் உள்ளன. ஆடு, மாடுகள் காைலயில் மேய்ச்சலுக்கு ெசன்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.

தற்போது நாகர்கோவில் பகுதியில் மழை பெய்து வருவதால் பள்ளமான பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இந்த நிலையில், நேற்று மேய்ச்சலுக்கு பிறகு பொன்ராஜிக்கு சொந்தமான 3 பசுமாடுகள் அனந்தநாடார் குடியிருப்பு பகுதிக்கு வந்தன.

இதற்கிடையே அங்கு மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. இந்த மின்கம்பி பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்ததால், அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது.

இந்த நிலையில் மாடுகள் ஒவ்ெவான்றாக அந்த தண்ணீரில் சென்றன. இதனால் மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகளும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. 3 பசுமாடுகளும் இறந்து கிடந்ததை பார்த்த பொன்ராஜ் கதறி அழுதார்.

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அறுந்து கிடந்த மின்கம்பியில் மின் இணைப்பை தடை செய்தனர்.

குழந்தைகள் யாரேனும், மின்கம்பி அறுந்து விழுந்த சமயத்தில் அங்கு சென்றிருந்தால், குழந்தைகளுக்கும் பசுமாட்டுக்கு நேர்ந்த கதி தான் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக அந்த மாதிரியான சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாயிக்கு சொந்தமான 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.