Home » தமிழகச் செய்திகள் » வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை
202104070542257514_The-similarity-between-Ajith-and-Vijay-who-came-to-vote_SECVPF

வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதேபோல், நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார். வாக்களிக்க வந்த நடிகர்கள் அஜித்குமார், விஜய் இடையே ஒரு ஒற்றுமை இருந்ததை காண முடிந்தது. அதாவது, அஜித்குமார் அணிந்திருந்த முககவசம் கருப்பு நிறத்திலும், அதில் உள்ள கயிறு சிவப்பு நிறத்திலும் இருந்தது. இதேபோல், விஜய் ஓட்டிவந்த சைக்கிள் கருப்பு – சிவப்பு நிறத்தில் இருந்தது. இருவருக்கும் இடையே இருந்த ஒற்றுமை இதுதான்.
இதைவைத்து, அவர்கள் இருவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்களோ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வர வாய்ப்பு இருந்தாலும், யாருக்கு வாக்களித்தோம் என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த பரம ரகசியம்.