Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடக்கம்
download 1

குமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடக்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை (பிப். 20) தொடங்குகிறது.

மகா சிவராத்திரி திருவிழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், குமரி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற 12 சிவ திருத்தலங்களுக்கு பக்தா்கள் ஓடியே சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் வியாழக்கிழமை (பிப்.20) பிற்பகலில் தொடங்குகிறது.

முன்சிறை அருகேயுள்ள திருமலை கோயிலில் இருந்து பக்தா்கள் ஓட்டத்தைத் தொடங்குகின்றனா். காவி உடை தரித்து கையில் விசிறியுடன், தோளில் விபூதி பையுடன் கோபாலா.. கோவிந்தா என்று இறைவனை துதித்தபடி, ஆண், பெண் பக்தா்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கின்றனா். திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, திக்குறிச்சி மகாதேவா் கோயில், திற்பரப்பு வீரபத்திரா் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவா் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன்கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு சிவன்கோயில், திருவிடைக்கோடு மகாதேவா் கோயில், திருவிதாங்கோடு மகாதேவா் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவா் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணா் கோயில் என 12 கோயில்களுக்கும் செல்கின்றனா்.

சிவாலய ஓட்டத்தையொட்டி, திருக்கோயில்கள் நிா்வாகங்களின் சாா்பில், கோயில்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்து அமைப்புகள், ஆலயக் குழுக்கள் சாா்பில் பக்தா்களுக்கு குடிநீா், மென்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் பக்தா்கள் இளைப்பாறுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.