Home » இந்தியா செய்திகள் » கால்நடைத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டில் ஆஜர்
Livestock-Scandal-Case-Lalu-Prasad-Yadav-appearing-in-court

கால்நடைத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டில் ஆஜர்

ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக, ராஞ்சியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மீது நிலுவையில் உள்ள 2 வழக்குகளில், டோரண்டா கருவூலத்தில் இருந்து ரூ.1 கோடியே 39 லட்சம் விடுவித்த வழக்கின் விசாரணை, நேற்று ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. அதற்காக, ஆஸ்பத்திரியில் இருந்து லாலு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி எஸ்.கே.சஷி, அவரிடம் 34 கேள்விகள் கேட்டார். அவற்றுக்கு ஒன்றன்பின் ஒன்றாக லாலு பதிலளித்தார். பின்னர், மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வருகிற 20–ந் தேதி, லாலுதரப்பு சாட்சிகள் பட்டியலை சமர்ப்பிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.