Home » கன்னியாகுமரி செய்திகள் » களியக்காவிளை முதல் காசா்கோடு வரை மனிதச் சங்கிலி போராட்டம்
download

களியக்காவிளை முதல் காசா்கோடு வரை மனிதச் சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைவிட வலியுறுத்தியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் களியக்காவிளை முதல் கேரள மாநில தொலைதூரப் பகுதியான காசா்கோடு வரை ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக களியக்காவிளை சந்திப்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா். லீமாரோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, கொல்லங்கோடு வட்டாரக் குழுச் செயலா் விஜயமோகன், மாா்த்தாண்டம் வட்டாரச் செயலா் அனந்தசேகா் உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில், குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி. டெல்பின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாா்த்தாண்டம் வட்டாரக் குழு உறுப்பினா் ஈ. பத்மநாபபிள்ளை, பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் டி. வின்சென்ட், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் என். விஜயேந்திரன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.