Home » Tag Archives: news in kanyakumari

Tag Archives: news in kanyakumari

kim_2

இரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு

தேங்காய்ப்பட்டனம் துறைமுக முகத்துவாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விசைப்படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவர் நீண்ட நேர தேடுதலுக்குப் பின் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியதாசன் மகன் சஜின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த கமலியாஸ் மகன் இக்னேஷியஸ் (42) உள்பட 11 மீனவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இரயுமன்துறை பகுதியில் உள்ள தேங்காய்ப்பட்டனம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் (ஆறு கடலில் கலக்கும் பொழிமுகம்) பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததையடுத்து, ...

Read More »
12

நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு

நாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை கைவிடாததால் தீர்த்துக் கட்டியதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). மரக்கடை அதிபர். இவருடைய மனைவி நீலாவதி (41). இவர்களுடைய மகனுக்கு 18 வயதாகிறது. ராமதாஸ் தனது மரக்கடையை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து நடத்தி வந்தார். வீடு மரக்கடையின் மாடியில் அமைந்திருந்தது. நீலாவதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ராமதாஸ் தனது ...

Read More »
123

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கன்னியாகுமரி பகுதியில் முழு சுய ஊரடங்கு

கன்னியாகுமரி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு முதன் முதலாக சின்னமுட்டம் துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி மூலம் தொற்று பரவ தொடங்கியது. அதன்பிறகு கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கடற்கரை கிராம மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதை தடுக்க கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல ஊர் கமிட்டி கூட்டம் தலைவர் நாஞ்சில் ...

Read More »
552800

கந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கந்துவட்டி வழக்கில் காசி மீது 1,250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 26), கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் பல்வேறு பெண்களுடன் பழகி நெருக்கமாக இருந்தபோது புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜீனியர் மற்றும் ஒரு சிறுமி உள்பட 5 பெண்கள் தனித்தனியாக ...

Read More »