Home » Tag Archives: nagercoil news

Tag Archives: nagercoil news

568809

குமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு விநாடிக்கு 4,528 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. மழையால் கால்வாய், ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. சூரங்குடி, குலசேகரம், தக்கலை உட்பட பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நாகர்கோவில் ஊட்டுவாழ் மடத்தில் மழையால் 6 வீடுகள் சேதமடைந்தன. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை கடல் சீற்றம் நிலவியது. ...

Read More »
12

நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு

நாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை கைவிடாததால் தீர்த்துக் கட்டியதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). மரக்கடை அதிபர். இவருடைய மனைவி நீலாவதி (41). இவர்களுடைய மகனுக்கு 18 வயதாகிறது. ராமதாஸ் தனது மரக்கடையை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து நடத்தி வந்தார். வீடு மரக்கடையின் மாடியில் அமைந்திருந்தது. நீலாவதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ராமதாஸ் தனது ...

Read More »
02

குமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை மூடல்

குமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை குறைந்ததையடுத்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. புதன்கிழமை இரவு தொடங்கிய மழை இடைவிடாது பெய்தது. தொடா்ந்து அணைகளின் நீா்வரத்துப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேல் கோதையாறு, கீழ்கோதையாறு பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்வரத்துப் பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால், அந்த அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.மேலும், பாசனப் பகுதிகளிலும் ...

Read More »