Home » கன்னியாகுமரி செய்திகள் » 3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ
sureshrajan live

3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ

நாகர்கோவில் 25, கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குளே முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தனது தொகுதி மக்களின் தேவைகளை முகநூல் நேரலையில் மூலம் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன். கடந்த இரண்டு வாரமாக நேரலை மூலம் மக்களை சந்தித்து வரும் இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் இவரது முகநூல் நேரலையை ஆறாயிரத்தி ஐநூறு பேர் பார்த்தனர், முந்நூற்றிக்கு மேற்பட்டவர்கள் கேள்விகளை கேட்டனர். இவர் பொறுமையாக ஒவ்வெருவரின் கேள்விகளுக்கும் பெயரை சொல்லி பதிலளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. நேரலையில் மட்டுமில்லாமல் தினமும் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து கொரோனா நிவாரண பணிகளை முன்னின்று செய்வதிலும் இவர் மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். மூன்றாவது முறையாக இன்று காலை 11 மணிக்கு மீண்டும் நேரலை மூலம் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.