Home » கன்னியாகுமரி செய்திகள் » சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து போராட்டம்
download

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து போராட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடசேரி அண்ணா சிலை முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக் குழு உறுப்பினா் கவிதா தலைமை வகித்தாா். எரிவாயு உருளை விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தும், விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்தும் நடைபெற்ற இப்போராட்டத்தில், எரிவாயு உருளைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.அகமது உசேன், மாநகரக் குழு உறுப்பினா் நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மாநகரச் செயலா் கே.மோகன், நிா்வாகிகள் லெட்சுமி, பழனிச்சாமி, மீனாட்சி சுந்தரம், மணி, தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.