Home » விளையாட்டுச்செய்திகள் » டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை முந்தினார் ஸ்டீவன் சுமித்
202101130413494740_Steven-Sumith-tops-kohli-in-Test-batsmen-rankings_SECVPF

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை முந்தினார் ஸ்டீவன் சுமித்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 238 ரன்கள் குவித்ததன் மூலம் 29 புள்ளிகளை கூடுதலாக பெற்ற அவர் மொத்தம் 919 புள்ளிகளுடன் கம்பீரமாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் தொடருகிறார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ஒரு வீரரின் அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கு முன்பு இதே வில்லியம்சன் 2018-ம் ஆண்டில் 915 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தனது முந்தைய சாதனையை அவர் மாற்றி அமைத்துள்ளார். நியூசிலாந்து வீரர்களில் வில்லியம்சனை தவிர்த்து ரிச்சர்ட் ஹாட்லீ மட்டும் 900 புள்ளிகளை (1985-ம் ஆண்டில் 909 புள்ளி) கடந்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் 131, 81 ரன்கள் வீதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அதற்குரிய பலனாக 23 புள்ளிகளை சேகரித்து மொத்தம் 900 புள்ளிகளுடன் 3-ல் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய இந்திய கேப்டன் விராட் கோலி சிட்னி டெஸ்டை தவறவிட்டதற்காக 9 புள்ளியை இழந்ததுடன் 870 புள்ளிகளுடன் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கோலியை வெகுவாக நெருங்கிவிட்ட ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 866 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறார்.