பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » இந்தியாவில் Startup Bubble.. சிக்கித்தவிக்கும் ஊழியர்கள்..!
startup-own-business

இந்தியாவில் Startup Bubble.. சிக்கித்தவிக்கும் ஊழியர்கள்..!

இந்தியாவில் ஆன்லைன் சேவைகள் குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிகமுக்கியமான காரணம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். சொல்லப்போனால் ஆசியாவிலேயே சீனாவிற்கு அடுத்தாக அதிகளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பதும் இந்தியாவில் தான், அதேபோல் அதிக வளர்ச்சி அடைந்துள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு சிக்கலில் சிக்கியதுள்ளது. இதனால் ஊழியர்களைக் கொத்துகொத்தாக நிறுவனத்தை விட்டு வெளியேற்றி வருகிறது.

எல்லோருக்கும் டாட்காம் பபுள் தெரியும், அதேபோன்ற நிலை தான் தற்போது இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் நிலவுகிறது. ஆம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக அதிகளவிலான பணத்தைச் செலவு செய்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் தற்போது செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் இயங்கும் 90 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டில் தான் இயங்குகிறது. இதனால் நிர்வாகத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து முன்னணி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்திகிறது. இந்நிலையில் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் செலவுகளைக் குறைக்க முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் காரணமாகவே தற்போது ஊழியர்களை வெளியேற்றும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். அதிலும் முக்கியாக நாட்டின் ஸ்டார்ட்அப் யூனிகார்ன் எனக் கூறப்படும் ஓயோ, ஓலா, பேடிஎம், குவிக்கர், சோமேட்டோ மற்றும் ரிவிகோ ஆகிய ஆகிய நிறுவனங்கள் தற்போது ஊழியர்களை வெளியேற்ற தயாராகி வருகிறது.

டிசம்பர் 20ஆம் தேதி ஓயோ நிறுவனம் சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் பணியை ஜனவரி மாத இறுதிக்குள் செய்து முடிக்க ரெடியாகியுள்ளது பட்ஜெட் ஹோட்டல் நிறுவனமான ஓயோ.

ஆன்லைன் டாக்ஸி புக்கிங் நிறுவனமான ஓலா ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய சலுகைகளை 20 சதவீதம் வரையில் குறைத்துள்ளது இதன் மூலம் 414 கோடி ரூபாய் சேமித்துள்ளது. மேலும் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 8 சதவீத ஊழியர்களைக் கடந்த சில மாதங்களில் பணிநீக்கம் செய்துள்ளது.

இதேபோல் ஆன்லைன் பேமெண்ட் மற்றும் ஷாப்பிங் நிறுவனமான பேடிஎம் கடந்த சில மாதத்தில் 5 முதல் 7 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

உணவு டெலிவரி செய்யும் சோமேட்டோ நிறுவனம் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ொ குவிக்கர் மற்றும் ரிவிகோ ஆகிய நிறுவனங்கள் தலா 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இப்படிப் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யாமல் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், சம்பள உயர்வை அதிகளவில் குறைத்து வருகின்றனர். இதன் மூலம் கணிசமான நிதியை சேமித்து வருகின்றனர்.

இவர்களோடு ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவன முதலீட்டில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 10000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் சந்தை ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இதேபோன்ற சூழ்நிலை ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். இது முதலீட்டாளர்கள் நெருக்கடியின் காரணமாகவா..? அல்லது திறனற்ற நிர்வாகத்தின் காரணமாவா..? என்பதே தற்போதைய கேள்வி.