Home » இந்தியா செய்திகள் » ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு – மத்திய அரசு
India-to-invite-Imran-Khan-for-Shanghai-Council-meet

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு – மத்திய அரசு

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது,ஷாங்காய் அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதை சுட்டிக்காட்டிய ரவீஷ்குமார், இது போன்ற நடவடிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் எதிர் காலத்தில் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் ஒரு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டுமானால், அது இருதரப்பு ரீதியாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற செய்தி பாகிஸ்தானுக்கு சத்தமாகவும், தெளிவாகவும் சென்றுள்ளது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம் என கூறினார்.