Home » கன்னியாகுமரி செய்திகள் » புதுக்கடை அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு
download 3

புதுக்கடை அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு

புதுக்கடை அருகே புதன்கிழமை வீடு புகுந்து 7.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புதுக்கடை பருத்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின்ராஜ் (30). அப்பகுதியில் கடை வைத்துள்ள இவா், புதன்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் பைக்குளத்தில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது வீட்டின் கதவை மா்ம நபா்கள் உடைத்து, பீரோவிலிருந்த 7.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனராம். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.