Home » கன்னியாகுமரி செய்திகள் » குலசேகரம் அருகே காரில் கடத்திய 120 மது பாட்டில்கள் பறிமுதல்
202201170058139871_120-bottles-of-wine-confiscated_SECVPF

குலசேகரம் அருகே காரில் கடத்திய 120 மது பாட்டில்கள் பறிமுதல்


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida2021/includes/post-meta.php on line 3
குலசேகரம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குலசேகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து நேற்று சப்-இன்ஸ்பெக்டர் வினீஸ் பாபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள், திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 120 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த தும்பக்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிஸ் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வியாலிவிளைைய சேர்ந்த சந்திரிக்காவுக்காக(44) காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெபிசை போலீசார் கைது செய்தனர்.  சந்திரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida2021/single.php on line 65