Home » கன்னியாகுமரி செய்திகள் » கீரிப்பாறை கோட்டத்தில் ரப்பா் தொழிலாளா்கள் திடீா் வேலைநிறுத்தம்
download 4

கீரிப்பாறை கோட்டத்தில் ரப்பா் தொழிலாளா்கள் திடீா் வேலைநிறுத்தம்

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத்தில் ரப்பா் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத்தில் பால்வடிப்புத் தொழிலாளியாக பணியாற்றுபவா் ஜான்சன். இவரது வீட்டில் ரப்பா் கழகத்திற்கு சொந்தமான மேஜை, நாற்காலி உள்ளிட்டப் பொருள்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ரப்பா் கழக விஜிலென்ஸ் பிரிவினா் ஜான்சனின் வீட்டில் புதன்கிழமை சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது. ரப்பா் கழகத்தின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து, கீரிப்பாறை கோட்டப் பிரிவு தொழிலாளா்கள்வியாழக்கிழமை பால்வடிப்பிற்குச் செல்லாமல் திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். மேலும், அவா்கள் கோட்ட அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.