Home » கன்னியாகுமரி செய்திகள் » டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
Public-petition-to-Collector-Office-to-change-the-Tasmac

டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

நாகர்கோவில் கோட்டார் கேப்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என கடந்த மாதம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதையும் மீறி திறக்கப்பட்டு உள்ளது. கடையின் அருகே ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க் ஆகியவை உள்ளன.

மேலும் மதுபிரியர்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்களின் நலனை கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.