பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » சற்று முன் » தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு
Tamil_News_CM-Announced-SSLC-Exam-postpond-in-Tamilnadu

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு

உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக சட்டசபையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.