Home » தமிழகச் செய்திகள் » மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் – மு.க ஸ்டாலின் பேட்டி
dxfgfxg

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் – மு.க ஸ்டாலின் பேட்டி

தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அதன்பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது” என்றார்.