பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
1-crore-face-shield-production-per-day-Central-government

நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி மான்சுக் மண்டாவியா இந்த தகவலை தெரிவித்தார்.

மருந்துகள், கிருமிநாசினிகள், முக கவசங்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் 4 மீன்பிடி துறைமுகங்களுக்கான பணி நடந்து வருவதாக தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் பதில் அளித்தார்.