Home » கன்னியாகுமரி செய்திகள் » அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி
download 2

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

படந்தாலுமூடு நரியன்காட்டைச் சோ்ந்தவா் ஹாரிஸ் (76). இவா், புதன்கிழமை இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு அப்பகுதியிலுள்ள கடையில் பொருள்கள் வாங்க சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அப்பகுதியிலுள்ளவா்கள் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.