Home » வர்த்தகம் செய்திகள் » பான் கார்டு வேணுமா? உடனே இதைப் பண்ணுங்க!
samayam-tamil

பான் கார்டு வேணுமா? உடனே இதைப் பண்ணுங்க!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அப்படி இணைக்காவிட்டால் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும். இப்படிப்பட்ட சூழலில் இன்னும் பலர் பான் கார்டே இல்லாமல் இருக்கின்றனர். பான் கார்டு இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவிட வேண்டியதில்லை. எப்படி இணைப்பது என்று இங்கே பார்க்கலாம்.

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று, ஆதார் செக்சனில் ’Instant PAN’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் ’Get New PAN’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களது ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டால் உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும்.

ஓடிபி நம்பரைப் பதிவிட்டு உங்களது விவரங்களைச் சரிபார்த்த பின்னர் ஈமெயில் ஐடியை வழங்க வேண்டும். 10 நிமிடங்களில் உங்களது E-PAN தயாராகிவிடும். உடனடியாக PDF வடிவத்தில் உங்களது பான் கார்டு உங்களுக்குக் கிடைக்கும். உங்களது ஆதார் நம்பரைப் பதிவிட்டு இந்த PDF ஆவணத்தை நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஈமெயில் ஐடியிலும் உங்களது பான் ஆவணம் அனுப்பப்பட்டிருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*