Home » விளையாட்டுச்செய்திகள் » தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்
National-Junior-Athletics-Gold-for-Chennai-student-in

தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வரும் 3-வது கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தடகளத்தில் நேற்று நடந்த ஆண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை வேலம்மாள் (முகப்பேர் மேற்கு) பள்ளி மாணவர் எஸ்.பிரதீப் 1 நிமிடம் 52.50 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.