Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ !
susususususu

நாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ !

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 28.7 லட்சம் உணவு பொட்டலங்களை 19 நாட்களின் 36 நகரங்களில் திமுகவினர் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகமெங்கும் திமுகவினர் செய்து வரும் நிவாரண பணிகள் மக்கள் மத்தியில் வெகுவாக சென்றடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் செய்துள்ள பணிகள் குறித்து மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். கொரோனா தொற்று ஆரம்பித்த போது முதல் தற்போது வரை தொய்வின்றி இவரது பணி தொடர்க்கிறது.

ஆரம்ப கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

முதலில் மார்ச் 18 ஆம் தேதி கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டார். மார்ச் 21-ஆம் தேதி குமரி (கிழக்கு) மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருவோர் கை கழுவிவிட்டு உள்ளே வர ஏற்பாடு செய்து கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை தனது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஏற்படுத்தினார். அதே நாளில் கொரோனா தொற்று ஏற்படாமல் தொகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வலியுறுத்தி விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டார்.

மார்ச் 23 ஆம் தேதி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். அதே நாளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தேவையான உணவுகளை வழங்கினார். இதே போல் பசியின்றி வாடும் மக்களின் பசி போக்க திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் எளியோருக்கு கைகொடுப்போம் ! மனிதநேயம் காப்போம் என விழிப்புணர்வு செய்தி வெளியிட்டார். தொடர்ந்து பல விழிப்புணர்வு காணொளிகளில் பேசி தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஊரடங்கிலும் ஓடோடி சென்ற எம்எல்ஏ

மார்ச் 25 ஆம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 27 ஆம் தேதி நாகர்கோவிலை  அடுத்த ஆசாரிபள்ளம் காவல்நிலையம் பின்புறம் ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஆக்கர் கடையில் திடீரென தீ பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு சென்று சம்பவத்தை நேரில் பார்வையிட்டு வேண்டிய ஏற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆறுதல் கூறினார். அதே நாளில் மாவட்ட நிர்வாகம் இந்த பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ வசதியும்,பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மறுநாள் நாகர்கோவில் வடசேரியிலுள்ள ஆதரவற்றோருக்கு உணவு தயாரிக்கும் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதே மார்ச் 28 ஆம் தேதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் குறித்து பல இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்க கோரிக்கை

மார்ச் 28 ஆம் தேதி முதன்முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.இவரது தொடர் வலியுறுத்தல் காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யும் கூடம் செயல்பட ஆரம்பித்தது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாளில் இறந்த 6 பேரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை கேட்டிருந்தார். அதே நாளில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் இந்த மரணங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மார்ச் 29 ஆம் தேதி கொரோனா விஷயத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என பத்திரிகையாளர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

பிறந்தநாளில் வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய எம்எல்ஏ

மார்ச் 31 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என தெரிவித்திருந்த சுரேஷ்ராஜன் உண்மையில் இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் எனக்கு தரும் சிறந்த பரிசு என்பது, அரசின் அறிவுரைப்படி தொடர்ந்து சமூக_விலகலை கடைபிடியுங்கள். முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து செய்தி பதிவிடுவதற்கு பதிலாக #நான்_சமூக_விலகலை_சரியாக_கடைபிடிக்கிறேன்” என எனது முகநூல் பக்கத்தில் tag செய்யுங்கள். இதுவே நீங்கள் இந்த பிறந்தநாளுக்கு எனக்கு தரும் மிகப்பெரிய பரிசு என்ற சமூல அக்கறையுடன் கூடிய புதுமையாக அறிவுப்பு ஒன்றியும் வெளியிட்டார். இதனை இந்து தமிழ் உள்ளிட்ட பத்திரிகைகள் பாராட்டின.

ஒரு மாத ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்கினார்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் தனது  ஒரு மாத ஊதியமான ரூ.1,05,000-ஐ “தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மார்ச் 30 ஆம் தேதி வழங்கினார். அந்த ஊரடங்கு வேளையிலும் நாகர்கோவில் மாநகரிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று முகக்கவசங்களை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் 108 வாகனத்தில் பணிபுரியும் சுமார் 80 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களான முக கவசம், சானிடைசர் போன்ற பொருட்களை நேரடியாக சென்று வழங்கினார். பின்னர் நாகர்கோவில் மாநகரிலுள்ள போக்குவரத்து காவலர்கள், காவல்துறை புலனாய்வு காவலர்கள் அனைவருக்கும் முககவசங்களை வழங்கினார்.  அன்று நிவாரண பணிகளை வழங்க தொடங்கிய சுரேஷ்ராஜன் அதன்பின் தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

ஊரடங்கின் போது முகநூல் நேரலை மூலம் மக்கள் குறை கேட்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொகுதி மக்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழலில் மூன்று முறை முகநூல் நேரலை மூலமாக மொத்தம் 16,000 மக்களை சந்தித்து அவர்களில் பலர் கேட்ட கேள்விகள், வைத்த கோரிக்கைகள் ஆகியவதிற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ப்பு  நடவடிக்கை எடுத்தார். ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பலநூறு இடங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

ருசிகர சம்பவம்

ஒன்றிணைவோம் வா திட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரிய ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு பாஜாக பிரமுகரின் இல்லத்திற்கு அடுத்த சிலமணி நேரங்களில் அந்த பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகளை அனுப்பினார் எம்எல்ஏ. நிவாரண பொருட்களுடன் வீடு தேடி வந்த திமுக நிர்வாகிகளை பார்த்தவுடன் திகைத்துப்போனார் பாஜக காரர். ஏனனில் அவர் திமுக உண்மையிலேயே உதவி செய்கிறதா என சோதித்து பார்க்க தான் போன் பண்ணினாராம். இந்த ருசிகர செய்தியை ஹிந்து ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டிருந்தனர். பல ரேஷன்கடைகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என ஆய்வுகள் மேற்கொண்டார். தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கும் வகையில் மிக துரிதமாக நிவாரண பணிகளை மேற்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவரும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வின் பணி நாகர்கோவில் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமன்றி ஒட்டுமொத்த மாவட்ட மக்களின் கவனத்தையும் அவர்மீது ஈர்த்துள்ளது என்பது தான் உண்மை.