Home » கன்னியாகுமரி செய்திகள் » பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி – போலீஸ் விசாரணை
The-mystery-men-who-snatched-the-jewelry-from-the

பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி – போலீஸ் விசாரணை

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே கல்வனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மேரிஜெயா (வயது 43). இவர், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையை திறப்பதற்காக மேரிஜெயா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிள் மேரிஜெயாவின் அருகில் வந்த போது, பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் மேரி ஜெயாவின் கழுத்தில் கிடந்த 1¼ பவுன் நகையை பறிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நகையை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். எனினும், மர்ம நபர் நகையை அவரிடம் இருந்து பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். உடனே மர்ம நபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

பின்னர் இதுகுறித்து மேரிஜெயா கொல்லங்கோடு போ லீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.