பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » கரோனா வைரஸால் விமான நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு: ஊதியத்தைக் குறைத்தது இண்டிகோ
business news

கரோனா வைரஸால் விமான நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு: ஊதியத்தைக் குறைத்தது இண்டிகோ

கரோனா வைரஸால் விமானப் போக்குவரத்து சேவை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், விமான சேவை நிறுவனங்கள் அதன் பணியாளர்களின் ஊதியத்தை குறைத்து வருகின்றன.

இண்டிகோ நிறுவனம் 25 சதவீத அளவில் ஊதியக் குறைப்பை அறிவித்துள்ளது. ‘கரோனா வைரஸ் தீவிரத்தால் விமான சேவை பாதிப்பைச் சந்தித்துள்ளது. விளைவாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில்நிறுவனத்தின் நிதிநிலையை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் ஒருபகுதியாகவே பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது’ என்று இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா தெரிவித்தார்.

அவருடைய ஊதியம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. மூத்த துணைத் தலைவர்களின் ஊதியம் 20 சதவீத அளவிலும், துணைத் தலைவர்கள், விமானிகளின் ஊதியம் 15 சதவீத அளவிலும் குறைக்கப்படுகின்றன. உதவி துணைத் தலைவர்கள், கேபின் குழுவினர்களின் ஊதியம் 10 சதவீத அளவிலும் குறைக்கப்படுகிறது. பேண்ட் டி பிரிவில் இருப்பவர்களுக்கு 10 சதவீத அளவிலும், பேண்ட் சி பிரிவில் இருப்பவர்களுக்கு 5சதவீத அளவிலும் ஊதியம் குறைக்கப்படுகிறது.

பேண்ட் ஏ மற்றும் பேண்ட் பி பிரிவில் இருக்கும் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் ஊதியம் குறைக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிலும் 5 சதவீத அளவில் ஊதியம் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.