Home » உலகச்செய்திகள் » உலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு – அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தகவல்
202104070437035853_Kidney-damage-in-one-in-10-people-in-the-world--information_SECVPF

உலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு – அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தகவல்

அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையத்தின் மூலம் காணொலி காட்சி வழியாக மருத்துவ கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியதாவது:-
உலகில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறது. மேலும் 10 நோயாளிகளில் 9 பேர் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதையே தெரியாமல் இருக்கின்றனர். இதனால் தற்போது சிறுநீரக பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலக்கட்டத்திலும் எல்லைகளை தாண்டி இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.