Home » இந்தியா செய்திகள் » கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கையில் கர்நாடகா முதல் இடம்
202109180814135493_Karnataka-has-the-highest-number-of-corona-vaccines_SECVPF

கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கையில் கர்நாடகா முதல் இடம்

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்த பா.ஜ.க. திட்டமிட்டது.  அதற்கான துரித பணிகளில் இறங்கியது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் வரிசையில் கர்நாடகா முதல் இடம் பிடித்து உள்ளது.
இதுபற்றி கர்நாடக சுகாதார மந்திரி மருத்துவர் சுதாகர் கூறும்போது, நேற்று இரவு 9 மணி வரையில் 26.92 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நாட்டில் முதல் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.  உத்தர பிரதேசம் மற்றும் பீகார் என அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை காட்டிலும் நாங்கள் அதிக தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறோம்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளில் இந்த சாதனை முயற்சி இணைந்து வந்துள்ளது.  நேற்றுடன் இந்த செப்டம்பரில் 87 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறோம்.  செப்டம்பருக்குள் 1.5 கோடி தடுப்பூசிகளை செலுத்துவது என்ற நாங்கள் மேற்கொண்ட இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.