Home » கன்னியாகுமரி செய்திகள் » கருங்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
download

கருங்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் பகுதியில் பைக்கில் சென்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த லாசா் மனைவி ஜெபா(40). இவா், செவ்வாய்க்கிழமை கருங்கல்லிலிருந்து மிடாலக்காட்டிற்கு பைக்கில் சூசைபுரம் வழியாக சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த 2 போ் வழிமறித்து, ஜெபா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனராம். அவா் கூச்சலிட்டப்படி சங்கிலியைப் பற்றிக்கொண்டாராம். எனினும், இரண்டரை பவுன் சங்கிலி அறுபட்டு மா்ம நபா்கள் கையில் சிக்கியதாம். அந்த நகையுடன் மா்மநபா்கள் தப்பிவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.