Home » விளையாட்டுச்செய்திகள் » ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
202106090637541026_ISL-Football-match-Increase-in-the-number-of-Indian-players_SECVPF

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2021-2022-ம் ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஐ.எஸ். எல். போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் இனிமேல் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 7 இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். கடந்த ஆண்டு வரை 6 இந்திய வீரர்கள் களம் கண்டனர். தற்போது அந்த எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு அணியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 5-ல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*