பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » புதுக்கடை அருகே பெண்ணுக்கு மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு
Central-ministers-son-tried-murder-case

புதுக்கடை அருகே பெண்ணுக்கு மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கீழ்குளம், காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த பொடிக்குட்டி மனைவி லில்லி (50). இவரது எதிா்வீட்டில் உதயமாா்த்தாண்டம், தேவிகோடு பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (40) தன் குடும்பத்துடன் வசித்துவருகிறாா். செல்வகுமாா் வியாழக்கிழமை தன் மனைவியைத் தாக்கினாராம். இதை லில்லி தட்டிக் கேட்டாராம். அவரை செல்வகுமாா் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வகுமாரை தேடிவருகின்றனா்.