Home » உலகச்செய்திகள் » இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி நடப்பு ஆண்டில் 8.3% ஆக இருக்கும்: உலக வங்கி
202106090201274505_Indias-GDP-Growth-will-be-83-in-the-current-year-World_SECVPF

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி நடப்பு ஆண்டில் 8.3% ஆக இருக்கும்: உலக வங்கி

கொரோனா பாதிப்புகளால் உலகம் முழுவதும் பெரும் அளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு உள்ளது.  அவற்றில் தெற்கு ஆசியாவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான சர்வதேச பொருளாதார பலன்கள் பற்றிய அறிக்கை ஒன்றை உலக வங்கி நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டு உள்ளது.
அதில், தெற்காசியாவில் குறிப்பிடும்படியாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு 2வது அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலைக்கு மீள்வதற்கான இடைவெளி சிறிதளவே நிறைவடைந்து உள்ளது.  இதனால், வருகிற 2022ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலையை விட குறைவாக 9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தியாவில், நடப்பு 2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.3 சதவீதம் ஆக இருக்கும் என தெரிவித்து உள்ளது.  உள்கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் அதிகளவில் செலவிடுவதற்கான திட்டங்களால் இந்த வளர்ச்சி நிலையை இந்தியா எட்டும் என கூறப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*