Home » விளையாட்டுச்செய்திகள் » நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி
202111251143158611_India-vs-New-Zealand-1st-Test-Day-1-Lunch-Break_SECVPF

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றது.
தற்போது முதல் நாள் உணவு இடைவேளை வரையில், இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 52 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.