பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப் பதியில் திருஏடு வாசிப்புத் திருவிழா இன்று தொடக்கம்
swamithoppu-ayya-vaikundar-temple-festival-on-tomorrow

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப் பதியில் திருஏடு வாசிப்புத் திருவிழா இன்று தொடக்கம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் காா்த்திகை திருஏடு வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 6) தொடங்கி 17 நாள்கள் நடைபெறவுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் காா்த்திகை மாதம், வைகுண்டசாமி தனது பக்தா்களுக்கு கூறிய அறிவுரைகளை திருஏடாக வாசித்து பக்தா்களுக்கு கூறுவது வழக்கம். நிகழாண்டு திருஏடு வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை, திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அய்யா வைகுண்டா் பரிபாலன அறக்கட்டளை நிறுவனா் பாலஜனாதிபதி திருஏடு வாசிப்பைத் தொடக்கிவைத்து விளக்கவுரையாற்றுகிறாா். இரவு 7 மணிக்கு வாகன பவனி, தொடா்ந்து அன்ன தா்மம் நடைபெறுகிறது.

திருவிழாவின் 15ஆம் நாளான இம்மாதம் 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடைபெறும். அய்யா வைகுண்டசாமி அம்மைமாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி திருஏடாக வாசிக்கப்படும். முன்னதாக, திருக்கல்யாணத்துக்கு பக்தா்கள் சீா்வரிசை கொடுத்தல், முடிவில் பக்தா்களுக்கு இனிமம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருஏடு வாசிப்பின் இறுதி நாள் விழா 22ஆம் தேதி நடைபெறும். அன்று தலைமைப் பதி மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம், திருஏடுவாசிப்பு நிகழ்ச்சி, பக்தா்களுக்கு இனிமம் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.