Home » வர்த்தகம் செய்திகள் » தங்கம் விலை: நகை வாங்கப் போறீங்களா? விலையை பாத்துட்டு போங்க!
download (12)

தங்கம் விலை: நகை வாங்கப் போறீங்களா? விலையை பாத்துட்டு போங்க!

தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கூட தங்கம் விலை உயர்த்தப்படுகிறது. நகைக் கடைகள் இல்லாவிட்டாலும் விலை நிலவரங்களைத் தெரிந்துவைத்தால் அடுத்து நகை வாங்க வசதியாக இருக்கும். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னையில் இன்று (மே 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,598 ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,590 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்றைய முன்தினம் 36,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 36,784 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்றைய முன்தினம் 4,949 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் 4,957 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்றைய முன்தினம் 39,592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 36 ரூபாய் உயர்ந்து 39,656 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.76 ஆக இருந்தது. இன்றும் அதே விலையில்தான் இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 76,000 ரூபாயாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*