பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
jewellery

தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது.

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 38 குறைந்து ரூ.3782க்கும், பவுன் ரூ.304 ரூபாய் குறைந்து ரூ.30256க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.31768 க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 60 காசுகள் குறைந்து ரூ.50.00க்கு விற்பனையாகிறது.