பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு
business news 3

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1,395 உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.41,705 ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமையன்று தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.40,310 என்று முடிவடைந்திருந்தது. இன்று புதுடெல்லியில் 10 கிராமுக்கு ரூ.1395 அதிகரித்து ரூ.41,705 ஆக உள்ளது.

அதே போல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.2,889 அதிகரித்து ரூ.38,100 ஆக உள்ளது, இது நேற்று கிலோவுக்கு 35, 211 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“24 காரட் ஸ்பாட் கோல்டு விலை டெல்லியில் இன்று ரூ.1395 அதிகரித்தது, காரணம் சர்வதேச சந்தையில் தங்கம் விலைகள் உயர்ந்தன” என்று ஹெச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபல் படேல் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையிலும் தங்கம், வெள்ளி விலைகள் கிடுகிடுவென உயர்ந்தது, தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1,514 டாலர்கள், வெள்ளி விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 12.96 டாலர்களாக அதிகரித்துள்ளது.