பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராசா பர்வேஸ் அ‌‌ஷரப்பை ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது – இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு
Former-Pakistani-prime-minister-Raza-Parvez-cannot-be

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராசா பர்வேஸ் அ‌‌ஷரப்பை ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது – இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானில் 2012-13 ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்தவர், ராசா பர்வேஸ் அ‌‌ஷரப். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர். இவர் மீதும், இன்னும் சிலர் மீதும் நந்திப்பூர் எரிசக்தி திட்ட ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ராசா பர்வேஸ் அ‌‌ஷரப்பும், மற்றவர்களும், ஊழல் தடுப்பு அவசர சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் தங்களை ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின்மீது நீதிபதி அசாம் கான் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில், அவர்களது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஊழல் தடுப்பு அவசர சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள்படி ராசா பர்வேஸ் அ‌‌ஷரப்பும், மற்றவர்களும் நிவாரணம் பெற தகுதி இல்லை, அவர்களை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.