Home » இந்தியா செய்திகள் » சிறைத்துறை பணியாளர்களின் சிறந்த சேவைக்காக தமிழகத்தில் 5 பேருக்கு பதக்கம்
5-medals-awarded-for-outstanding-service-of-prison-staff

சிறைத்துறை பணியாளர்களின் சிறந்த சேவைக்காக தமிழகத்தில் 5 பேருக்கு பதக்கம்

சிறப்பான சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற இருக்கும் சிறைத்துறை பணியாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. 35 பேருக்கு பதக்கம் வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். தனித்திறன் பணிக்காக 6 பேரும், சிறப்பான சேவைக்காக 29 பேரும் பதக்கம் பெறுகிறார்கள்.
இதில் தமிழகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. கே.ஜெயபாரதி, திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் யு.தமிழ்மாறன், பெண்கள் சிறப்பு சிறையின் துணை ஜெயிலர் எம்.பேபி, கொக்கிரகுளம் சிறப்பு சப்-ஜெயில் துணை ஜெயிலர் ஜே.கீதா, அருப்புக்கோட்டை சப்-ஜெயில் உதவி ஜெயிலர் எஸ்.கண்ணன் ஆகியோர் சிறந்த சேவைக்கான விருது பெறுகிறார்கள்.