பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் நோயாளியிடம் 5 பவுன் செயின் திருட்டு கண்காணிப்பு கேமரா ஆய்வு
Tiruvannamalai-temple-festival-woman--jewelry-snatch

குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் நோயாளியிடம் 5 பவுன் செயின் திருட்டு கண்காணிப்பு கேமரா ஆய்வு

நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயா (45). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில், சுயநினைவு இல்லாத நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் சென்று ஜெயாவை பார்க்க டாக்டர்கள் அனுமதி அளித்தனர். உறவினர்கள் சென்று பார்த்த போது ஜெயா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விசாரித்த போது உறவினர்கள் யாரும் நகையை கழற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கையை விரித்து விட்டனர். அதன் பிறகே ஜெயா கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெயா ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. அவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து பெண்ணிடம் இருந்து 5 பவுன் செயின் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.