பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ
Saligramam-near-shop-fire-accident

நாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ

நாகா்கோவில் செட்டிக்குளம் பகுதியிலுள்ள பூட்டிய கடையில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான மரப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாகா்கோவிலை அடுத்த செட்டிக்குளம் மயிலாடி பகுதியை சோ்ந்த ராஜா. இவருக்கு, சொந்தமான பா்னிச்சா் கடை உள்ளது. வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை இரவு ராஜா கடையை பூட்டிச் சென்றாராம். நள்ளிரவில் திடீரென கடைக்குள் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

கடைக்குள் இருந்து புகை வெளியேறுவதை கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயற்சித்தனா். மேலும், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப்படையினா் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான மரப் பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, தீ விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.