பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
Bus-falls-off-bridge-in-east-Russia-15-dead

ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

ரஷ்யாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

மகோய்டூய்- ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பேருந்து பயணித்த போது பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.