பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » ஏற்றுமதி, முதலீடுகள் பாதிப்பைச் சந்திக்கும்: 2020-21-ம் நிதி ஆண்டில் ஜிடிபி 5.1% ஆக குறையும்- ஃபிட்ச் தகவல்
business news 5

ஏற்றுமதி, முதலீடுகள் பாதிப்பைச் சந்திக்கும்: 2020-21-ம் நிதி ஆண்டில் ஜிடிபி 5.1% ஆக குறையும்- ஃபிட்ச் தகவல்

கரோனா வைரஸால் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி சரியும் என்றும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பொருளாதார ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, 2020-21-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக குறையும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது. முந்தைய கணிப்பில் 2020-21-ல் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகவும், 2021-22-ல் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறியிருந்தது.

கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி தீவிரபாதிப்புக்கு உள்ளாகும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஜிடிபி 5.0 சதவீதமாகவும், 2020-21 நிதி ஆண்டில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தியா பொருளாதாரரீதியாக கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தது. மக்களின் நுகர்வு திறன் குறைந்து உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது. முதலீடுகளும் சமீபமாக குறைந்து வந்தன. இந்நிலையில் தற்போது கரோனோ தாக்குதல் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.