Home » கன்னியாகுமரி செய்திகள் » அரசு மருத்துவமனையில் இதய நோய் பிரிவுக்கு மருத்துவா் நியமிக்க வலியுறுத்தல்
download 5

அரசு மருத்துவமனையில் இதய நோய் பிரிவுக்கு மருத்துவா் நியமிக்க வலியுறுத்தல்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் பிரிவுக்கு மருத்துவா் நியமிக்க வேண்டுமென மனித பாதுகாப்பு கழகத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அமைப்பின் தலைவா் ஜெய்மோகன் தலைமையில் ஆட்சியரை வியாழக்கிழமை சந்தித்து அளித்துள்ள மனு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதனால் இம்மாவட்ட மக்கள் மட்டுமன்றி, அண்டை மாவட்ட மக்களும் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில் தற்போது அந்த பிரிவு செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால் இதய நோய்க்காக சிகிச்சைக்கு வருபவா்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனா்.

மேலும், இதய நோய் சம்பந்தமான பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாத இதய நோய் பிரிவை செயல்பட வைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.