Home » உலகச்செய்திகள் » ஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
earth quake

ஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

டெஹ்ரான்,

ஈரானில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள அஸ்ப்ஃபோருஷான் என்ற இடத்தின் அருகே சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளில் எட்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரி முகமது பக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சற்று கடினமாகி உள்ளதாகவும், பாதிப்புகள் குறித்த முழு விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.