பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » தமிழகச் செய்திகள் » பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வை தள்ளிவைப்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
The-school-must-respond-to-the-postponement-of-the-final

பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வை தள்ளிவைப்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் நூலகராக இருப்பவர் வக்கீல் ஜி.ராஜேஷ். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘உலகம் முழுவதும் கொரோனா வைரசை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். அவ்வப்போது கைகளை கிருமி நாசினி மூலம் கழுவவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இவற்றை தாராளமாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட்ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யாமலும், இந்த 2 பொருள்களும் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்க தேவையான அறிவுரைகளை விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது’ என்றார்.

மனுதாரர் தரப்பில், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.