பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » கருங்கல் அருகே மதுக்கடை மூடல்
Collector-says-2-days-Tasmac-shop-closed-in-Thanjavur

கருங்கல் அருகே மதுக்கடை மூடல்

கருங்கல் அருகேயுள்ள புதுக்காடுவெட்டியில் குடியிருப்புப் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடை திங்கள்கிழமை மூடப்பட்டன.

கப்பியறை பேரூராட்சியில் புதுக்காடுவெட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தனியாா் கட்டடத்தில் சில நாள்களுக்கு முன்பு திடீரென மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா், துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினா். மேலும், ஞாயிற்றுக்கிழமை செல்லங்கோணம் பங்குத்தந்தை ஜிபுமேத்யூ தலைமையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். போராட்டத்துக்கு, குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் பிரின்ஸ், அரசியல் கட்சித் தலைவா்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

மதுக்கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை இந்த மதுக்கடை மூடப்பட்டது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.