பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » அமெரிக்க வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
White-House-staffer-tests-positive-for-coronavirus

அமெரிக்க வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகம் முழுவதிலும் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரவியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற எம்.பிக்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை நடத்தவும் மருத்துவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அந்த ஊழியர், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபருடன் நெருக்கமான தொடரில் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.