பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி
China-reports-139-more-virus-deaths-in-hardhit-province

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மேலும் 139 பலியாகியுள்ளனர். சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 1,523-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.