பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » கரோனா வைரஸ்; பல நாட்களுக்கு பிறகு பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு
business news 2

கரோனா வைரஸ்; பல நாட்களுக்கு பிறகு பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.

அமெரிக்காவிலும் கரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. கரோனாவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடங்கி பெரும் தொழில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில் பல நாட்கள் சரிவுக்கு பின்னர் பங்குச்சந்தைகள் இன்று சற்று மீளத் தொடங்கியுள்ளன. பிற்பகல் நிலவரப்படி வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது.

மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் நண்பகர் நிலவரப்படி 1600 புள்ளிகள்களுக்கும் அதிகமாக உயர்ந்தது. ஐடித்துறை பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து 29197 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 267 புள்ளிகள் உயர்ந்து அடைந்து, 8530 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.